நஜீப் அர்ரபாஈ, ஏ.பீ.எம்.இத்ரீஸ். வாழைச்சேனை 05: உயிர்ப்பைத் தேடும் வேர்கள், மஹ்மூத் ஆலிம் வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2007. (தெகிவளை: ஏஜே பிறின்ட் நிறுவனம், 44, புகையிரத நிலைய வீதி).
48 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 100., அளவு: 21×14.5 சமீ., ISBN: 955-8730-00-9.
ஆற்றல் மேம்பாட்டில் சிந்தனைகள் முக்கியம் பெறுகின்றன. சிந்தனைகளைப் பிறக்கச் செய்வதற்கான பல்வேறு வழிமுறைகளை இந்நூல் பரிந்துரைக்கின்றது. ஆற்றல் மேம்பாட்டு நூல் வரிசையில் வெளிவந்துள்ள மற்றுமொரு நூல் இது. 1983ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவிலுள்ள வேர்வில்ட் பல்கலைக்கழகத்தில் கல்வி முகாமைத்துவத்தில் முதுமானிப் பட்டத்தைப் பெற்ற கலாநிதி நஜீப் அர்ரபாஈ 1988இல் ஐக்கிய இராச்சியத்தில் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டத்தைப் பூர்த்தி செய்தவர். Accelerated Learning, Neuro-Linguistic Programming Accelerated Learning, Neuro-Linguistic Programming ஆகிய இரு துறைகளிலும் தனது கவனத்தைக் குவித்துள்ளார். இத்துறைகளில் பல பட்டறைகளையும் மாநாடுகளையும் நடத்தியுள்ளார். மொழி நரம்பியல் கலையில் தேர்ச்சி பெற்ற முதலாவது குவைத்திய கலாநிதியும் ஐக்கிய இராச்சியத்தில் N.L.P பயிற்சியை முடித்த முதலாவது அரபியும் இவரே. ஊடகவியலாளராகவும் பணியாற்றும் இவர் வாராந்தம் குவைத் தொலைக்காட்சியில் ரஸாயில் அல் இகா என்ற நிகழ்ச்சியை ஐந்து ஆண்டுகள் தொடர்ச்சியாக நடத்தியவர். இந்த நூல் ஏ.பீ.எம். இத்ரீஸ் அவர்களின் வழியாக தமிழ்வாசகர்களை அடைந்துள்ளது. (இந்நூல் இலங்கைத் தேசிய நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 122583).