சபா ஜெயராஜா. கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park, 1வது பதிப்பு, 2014. (கொழும்பு 11: சேமமடு பதிப்பகம்).
vi, 102 பக்கம், விலை: ரூபா 340., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-685-027-7.
சூழலுடன் தொடர்புடைய உளவியல், சமூகவியல், பண்பாட்டியல், கல்வியியல், இலக்கியங்கள், திறனாய்வு முதலாம் துறைகளை உள்ளடக்கிய விரிவான நூலாக இது வெளிவந்துள்ளது. சூழலியல் உளவியல், நிலத்தோற்றம் சார்ந்த உளவியற் பதிவுகள், கட்டட அமைப்பு உளவியல், வளர்முக நாடுகளின் சூழலியற் பிரச்சினைகள், போரும் சூழலியல் உளவியலும், இருத்தலியமும் உளவியலும் சூழலும், சூழலியல்வாதம், சூழல் இறையியல், இனக்குழுமச் சூழலியல், மருத்துவச் சூழலியல், சூழல் அழகியல், சூழலியற் கலை, இசையிற் சூழலியல், உடல் மொழி, சூழலியல் திறனாய்வு, குழந்தை வளர்ச்சியும் சூழலியலும், சூழலியற் கல்வி, பசுமைச் சமாதானம், பண்பாட்டின் முனைப்பு உளவியல், பிரதேச இலக்கியம், தேசிய இலக்கியம் ஆகிய 21 தலைப்புகளில் இந்நூல் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.