செல்வத்துரை குருபாதம். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல. 7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2014. (சென்னை 94: ஸ்கிரிப்ட்ஸ் ஓப்செட்).
xvi, 212 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 150., அளவு: 21×14 சமீ.
தந்திரா ஞானம் என்னும் தத்தவவியல் நூல். ஒரே பார்வையில் தந்திரா, இயல்பாய் இரு, நீ நீயாக இரு ஆகிய மூன்று பிரிவுகளின்கீழ் 25 தலைப்புகளின் வழியாக தந்திராஞானம் பற்றி ஆசிரியர் எளிமையாக விளக்குகின்றார். மலேசியாவில் கோலாலம்பூரில் பிறந்த செல்லத்துரை குருபாதத்தின் தந்தையார் அங்கு புகையிரத இலாகாவில் பணியாற்றியவர். உலக யுத்த அசம்பாவிதங்களின் பின்னர் இள வயதில் யாழ்ப்பாணம் திரும்பியவர். ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றிய குருபாதம், யாழ்ப்பாணம்-ஈழநாடு பத்திரிகையில் உதவி ஆசிரியராகவும் சிலகாலம் பணியாற்றினார். பின்னர் சவூதி அரேபியாவில் லுயnடிர நகரில் நூலகமொன்றிலும் பணியாற்றியுள்ளார். அக்காலகட்டத்தில் அந்நிறுவனத்தின் உத்தியோகபூர்வ செய்தி இதழின் நிர்வாக ஆசிரியராகவும் செயற்பட்டிருந்தார். பின்னாளில் கனடாவில் குடியேறி அங்குள்ள சட்ட நிறவனமொன்றில் paralegal ஆகவும் சத்தியப் பிரமாண ஆணையாளராகவும் கடமையாற்றித் தற்போது எழுத்துப்பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 55975).