அ.றொபேட். யாழ்ப்பாணம்: அ.றொபேட், புனித தோமையர் வீதி, மாதகல், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1989. (மாதகல்: சென்.தோமஸ் அச்சகம், சென் தோமஸ் வீதி).
46 பக்கம், விலை: ரூபா 13.50, அளவு: 18.5×12.5 சமீ.
கொழும்புத்துறை கத்தோலிக்க குருத்துவக் கல்லூரியின் மெய்யியல்துறை மாணவரான அருட்செல்வன் அ.றொபேட் மனித நடத்தைகள் பற்றி மேற்கொண்ட ஆய்வின் நூல்வடிவம் இது. முன்னர் மனித நடத்தைக் கோலங்கள் என்ற தலைப்பில் ஒரு நூலை வெளியிட்டிருந்தார். இவரது இரண்டாவது நூலான பருவகால நடத்தைகள், மனிதரின் பருவகால நடத்தைகள் பற்றி, குறிப்பாக இளமைப்பருவம் பற்றி உளவியல்ரீதியாக விளக்குகின்றது. பருவவயதினர் தமது நடத்தைகளை உளவியல்ரீதியாக உணர்ந்து சமூகத்தேவைகளுக்கு முகம்கொடுக்கும் வகையில் சீர்செய்வதற்கு இந்நூல் வழிகாட்டுகின்றது. முகவுரை, இளமைப்பருவம், குடும்பத்தின் பங்கு, ஆளுமை, உளஉணர்ச்சியும் உளக் கிளர்ச்சியும், சமூக நடத்தை, பால் வேறுபாடு சார்ந்த ஊக்குவித்தலும் நடத்தையும், முடிவுரை ஆகிய எட்டு பிரதான இயல்களில் எழுதப்பட்டுள்ள இந்நூலின் இறுதியில் பின்னிணைப்பு, கலைச்சொற்கள், துணைநூற்பட்டியல் என்பனவும் காணப்படுகின்றன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 77312).