செல்வத்துரை குருபாதம். சென்னை 600017: குட்புக்ஸ் பப்ளிக்கேஷன்ஸ், பிளாட் 7, ஸ்ரீநிவாசா அப்பார்ட்மென்ட்ஸ், புது எண் 11. பழைய எண் 5, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2012. (சென்னை 94: ஸ்கிரிப்ட்ஸ் ஓப்செட்).
xii, 372 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 250., அளவு: 20.5×14 சமீ.
பிறப்புக்குப் பின் பிறப்பு- இறப்புக்குப் பின் இறப்பு, மரண அனுபவம் அடைந்தவரது அனுபவங்கள், ஞானிகளின் வாழ்வில், பிறப்புக்கும் இறப்புக்கும் அப்பால், முடிவான முடிவு ஆகிய ஐந்து பிரதான தலைப்பகளின் கீழ் 67 உப தலைப்புகளின்கீழ் இந்நூல் மறுபிறப்புப் பற்றிய பல்வேறு தகவல்களை வழங்குகின்றது. மலேசியாவில் கோலாலம்பூரில் பிறந்த செல்லத்துரை குருபாதத்தின் தந்தையார் அங்கு புகையிரத இலாகாவில் பணியாற்றியவர். உலக யுத்த அசம்பாவிதங்களின் பின்னர் இள வயதில் யாழ்ப்பாணம் திரும்பியவர். ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றிய குருபாதம், யாழ்ப்பாணம்- ஈழநாடு பத்திரிகையில் உதவி ஆசிரியராகவும் சிலகாலம் பணியாற்றினார். பின்னர் சவூதி அரேபியாவில் Yanbu நகரில் நூலகமொன்றிலும் பணியாற்றியுள்ளார். அக்காலகட்டத்தில் அந்நிறுவனத்தின் உத்தியோகபூர்வ செய்தி இதழின் நிர்வாக ஆசிரியராகவும் செயற்பட்டிருந்தார். பின்னாளில் கனடாவில் குடியேறி அங்குள்ள சட்ட நிறவனமொன்றில் paralegal ஆகவும் சத்தியப் பிரமாண ஆணையாளராகவும் கடமையாற்றித் தற்போது எழுத்துப்பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 56005).