10059 அறிவியல் தொடும் ஆழங்கள்.

பொ.மனோகரன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2014. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

98 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 300., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-447-8.

இந்நூல் அறிவியலையும் ஆன்மீகத்தையும் ஆதாரமாகக்கொண்டு மகத்தான மனித வாழ்க்கையை விளக்குகின்றது. மனித இருப்பு, கூர்ப்பு, மனம் மற்றும் வேற்றுலகவாசிகள் தொடர்பான விஞ்ஞான ஆய்வுக் கட்டுரைகளை இந்நூல் உள்ளடக்குகின்றது. அறிவியலையும் ஆன்மீகத்தையும் ஆதாரமாகக் கொண்டு மகத்தான வாழ்க்கையை விளக்கமுனையும் நூல் இதுவாகும். பரிணாமக் கோட்பாடுகள், மனிதனின் எதிர்கால மாற்றம், நிதர்சனம், காலம், அண்டமும் அறிவியலும், ஆகியன விளக்கப்பட்டுள்ளன. மனிதன் தனது கட்டுகளில் இருந்து விடுபட்டு பரிணாம வளர்ச்சியடைவதற்கும் பின்னர் பூரண விடுதலை பெற்று நிதர்சனத்தை உணர்ந்து கொள்வதற்கும் அறிவியல் எத்தகைய பங்களிப்பை நல்கவல்லது? அறிவியலினூடாக அது சாத்தியமா? என்பன போன்ற கேள்விகளுக்கானதொரு ஆன்ம விசாரமாக இந்நூலின் பெரும்பகுதி அமைந்துள்ளது. பேர்மனம், பேர்மனம்-கலந்துரையாடல், கூர்ப்படையும் மனிதன், கூர்ப்படையும் மனிதன்-கலந்துரையாடல், நிதர்சனம் ஒரு மாயை, காலம் கடத்தல், அண்டமும் அறிவியலும், பிளவுபட்ட மனநோய், அந்நியர்களின் வருகை ஆகிய ஒன்பது அத்தியாயங்களிலும் இவை  விரிவாக விளக்கப்பட்டுள்ளன. வைத்தியகலாநிதி பொ.மனோகரன்,  கொழும்பு இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்.  ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டம் பெற்று களுபோவில போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சில காலம் பணியாற்றியவர். தற்போது பொலனறுவை வைத்தியசாலையில் உணர்விழக்கச்செய்யும் மருத்தவராகக் கடமையாற்றுகின்றார்.

ஏனைய பதிவுகள்