செபமாலை அன்புராசா. யாழ்ப்பாணம்: அமலமரித் தியாகிகள் வெளியீடு, யாழ்ப்பாண மாவட்டம், 1வது பதிப்பு, 2013. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ். பிரின்டர்ஸ், ஜெயந்த் சென்டர், 28, மார்ட்டின் வீதி).
xvi, 120 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20×13.5 சமீ.
எந்தவொரு சமூகத்திலும் தொடர்புகளும் அந்தத் தொடர்புகளின் மையத் தேவைகளும் முக்கியமானவை. இந்தச் சமூக ஊடாட்டங்களில் அவர்களது சிந்திக்கும் முறைகள், மனவெழுச்சிகள், நடத்தைக் கோலங்கள், நம்பிக்கைகள், பெறுமானங்கள் என்பனவே அச்சமூக விழுமியங்களை நிர்ணயிக்கின்றன. இவை பற்றியே அருட்தந்தை செபமாலை அன்புராசா அவர்கள் எழுதிய இந்த விழிப்புணர்வுக் கட்டுரைகளின் தொகுப்பாகிய நூல் பேசுகின்றது. விளம்பர உலகம் நம்மை விழுங்கி விடுமா? பிற்போடும் மனநிலையை பின்தள்ளுவோமா? பெரும்பான்மைத் தீர்ப்பு சரியாகுமா? நம் ஆன்மாவைக் காதலிப்போமா? எப்படியும் வாழலாமா? உண்மை மனிதர்களாவோமா? வாழ்வதன் பொருள் உணர்வோமா? மனத்துணிவு கொள்வோமா? கவலைகளைக் களைவோமா? குறையப் பேசி நிறையச் சாதிப்போமா? இல்லற வாழ்வை இனிதாக்குவோமா? பகிர்தலால் பலம் பெறுவோமா? அவசரப்பட்டு ஆவதென்ன? இன்னும் கொஞ்சம் முன்னேறுவோமா? எல்லாம் நன்மையாகுமா? திருமணங்கள் சொர்க்கத்திலா/ ரொக்கத்திலா? குடி குடியைக் கெடுக்குமா? பெண்கள் விழிப்புணர்வு பெறுவார்களா? பணத்தால் குணமிழந்து போகலாமா? மாற்றக்கூடியவைகளை மாற்றுவோமா? மனிதனுக்குக் கடினமாவது மனிதனாவதா? மாற்றுக் கலாச்சாரத்தை தோற்றவிப்போமா? மக்கள் பணி மையமாகுமா? தொலைக்காட்சிக்குள் தொலைந்து போகலாமா? நாகரீகத்தில் வளர்வோமா? என்று 25 கேள்விகளாகவே கட்டுரைகளின் தலைப்புகள் அமைகின்றன.