ச.முருகானந்தன். கரவெட்டி: திருமதி சந்திரகாந்தா முருகானந்தன், கலை ஒளி பிரசுரம், கரணவாய்கிழக்கு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2004. (கொழும்பு 6: ரெக்னோ பிரின்டர்ஸ், வெள்ளவத்தை).
68 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 18×12.5 சமீ.
இந்நூலாசிரியர், வன்னி மண்ணில் மருத்துவராகவும் படைப்பாளியாகவும் இரு துறைகளில் தன் ஆளுமையை வெளிக்காட்டியிருப்பவர். மானுடநேயத்துடன் தான் சார்ந்த சமூகத்தைப் பீடித்திருக்கும் பிணிகளுக்கு வைத்தியம் செய்வது மட்டுமல்லாமல் அச்சமூக வளர்ச்சியின் ஊட்டச் சக்தியாகத் திகழும் கருத்துக்களையும் வழங்கும் ஒரு வலிமைமிக்க பேனா இவருடையது. இவரது விழிப்புணர்வுக் கட்டுரைகள் கொண்ட தொகுப்பு இது. நாமே எமது வாழ்வை உருவாக்க வேண்டும், உன்னை அறிந்தால் உலகத்தில் நீ வாழலாம், வெற்றியின் பாதை கரடுமுரடானவை, துணிந்து நில் துணிந்து செல், தொலைநோக்குடன் செயற்படுங்கள் போன்ற இன்னோரன்ன நம்பிக்கையூட்டும் 24 தலைப்புகளின்கீழ் ஆசிரியரால் எழுதப்பட்ட கட்டுரைகள் இதில் இடம்பெற்றுள்ளன. இவை முன்னர் வெள்ளிநாதம், தினக்குரல், வீரகேசரி ஆகிய பத்திரிகைகளில் பிரசுரமானவை.