சி.அருணகிரிநாதன். வட்டுக்கோட்டை: சி.அருணகிரிநாதன், பரிதி அகம், சிவன் கோவிலடி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1998. (யாழ்ப்பாணம்: கூட்டுறவுப் பதிப்பகம், யாழ்ப்பாணம் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம், 127 காங்கேசன்துறை வீதி).
60 பக்கம், விலை: ரூபா 65., அளவு: 21.5×14.5 சமீ.
பிரபஞ்ச மகிழ்ச்சி காண்பதற்கு இரண்டு அம்சங்களை இணைத்துக் காட்டி, இக்கட்டுரைத் தொகுதியை ஆசிரியர் ஆக்கியுள்ளார். ஒற்றுமையையும் கொல்லாமையையும் ஒன்றோடு ஒன்று பிணைத்துப் பிரபஞ்ச மகிழ்ச்சியைக் காணலாம் என்பதைத் தற்காலச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப இக்கட்டுரைகளின் வாயிலாகத் தெளிவுபடுத்துகின்றார். வேற்றுமை மலிந்த உலகம் ஐயா, ஒற்றுமையின் மூலம், அடிப்படையில் ஒற்றுமை காணல், ஜீவ குடும்பம், உயிர்க்கோளத்தின் அல்லல், எண்ணம், செயல், மகிழ்ச்சி, ஒருமித்த கருத்தைப் பெறல் ஆகிய ஏழு தலைப்புகளில் இந்நூலின் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 126818).