எம்.எச்.எம்.ஹஸன். கொழும்பு 9: அல்ஹஸனாத் வெளியீட்டகம், 77, தெமட்டகொட வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2007. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், ஸ்டேஷன் வீதி).
xi, 64 பக்கம், விலை: ரூபா 100.00, அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-1463-00-3.
கட்டிளமைப்பருவம் விரைவான உடல், உள, மனஎழுச்சி மாற்றங்களை நிகழ்த்தும் பருவமாகும். கட்டிளமைப் பருவத்தினர் வாழும் சமூகம் விரைவான மாற்றங்களை உள்வாங்கிக்கொள்கின்றது. ஒரு இளைஞன்ஃயுவதியின் கட்டிளமைப்பருவத்தில் முன்னெப்போதும் அவர் அறிந்திராத பிரச்சினைக்கு முகம் கொடுக்கவேண்டிய தேவை ஏற்படுகின்றது. அதற்கு ஆலோசனை வழங்கும் நிலையில் எமது சமூகப் பின்புலம் இல்லை. போதிய நூல்களும் இல்லை. இந்நிலையில் இந்நூல் கட்டிளம் பருவத்தினர் எதிர்நோக்கும் சில பிரச்சினைகளைக் கண்டறிந்து அவற்றுக்குத் தீர்வை முன்வைக்கின்றது. இளமை ஒரு அறிமுகம், உடலும் உள்ளமும், துரித உடல்விருத்திக்கு உட்படும் பருவம், கட்டிளமைப் பருவத்தினரின் உள்ளம், நுண்ணறிவு விருத்தியின் முக்கியகட்டம், பால்வேறுபாடு நுண்ணறிவில் செல்வாக்குச் செலுத்துமா?, சமநிலை ஆளுமை விருத்தி, சுயமதிப்பீடு செய்துகொள்ளல், தலைமுறை இடைவெளியின் தாக்கம், பதின்ம வயதின் மனவெழுச்சிக் கோளாறுகள், இளமையின் சக்தி ஆகிய 11 தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நூலாசிரியர் எம்.எச்.எம். ஹஸன் தேசிய கல்வி நிறுவகத்தின் பிரதம செயற்றிட்ட அதிகாரியாகக் கடமையாற்றுகிறார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 196759).