இராசேஸ்வரி ஈஸ்வரஞானம். இங்கிலாந்து: திருமதி இராசேஸ்வரி ஈஸ்வரஞானம், Flat 3, Hastings Court, 5, Parkhurst Road, Sutton, SM1 3RZ, 1வது பதிப்பு, 2014. (லண்டன்: நெட் பிரின்டர்ஸ்).
28 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.
இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் கரவெட்டியில் பிறந்த நூலாசிரியை வட இந்து மகளிர் கல்லூரியில் கல்வி கற்று, பின்னர் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியத்துவப் பயிற்சிபெற்று வர்த்தகத்துறையில் ஆசிரியையாக கொழும்பு விவேகானந்த மகாவித்தியாலயத்திலும், யாழ்.கரவெட்டி விக்கினேஸ்வரா கல்லூரியிலும் பின்னர் திருக்கோணமலை மெதடிஸ்ட் பெண்கள் கல்லூரியிலும் ஆசிரியராகப் பணியாற்றியவர். 1995இல் ஓய்வுபெற்றபின்னர் லண்டனுக்குப் புலம்பெயர்ந்து அங்கு வாழ்ந்து வருகிறார். 1997இல் தனது கணவருக்கு ஏற்பட்ட பக்கவாத நோய்க்கான சிகிச்சை வழங்கும் நோக்கில் சுநகடநஒழடழபல என்ற பிரதிபலிப்பு முறையில் லண்டனில் பயிற்சிபெற்றுத் தேர்ந்து தன் துணைவரின் நோயைக் குணப்படுத்தியதுடன் அத்துறையில் மேலதிகப் பயிற்சிபெற்று அத்துறையிலேயே பணியாற்றியவர். சுகமான வாழ்வுக்கு சுலபமான பயிற்சிகள் என்ற இறுவட்டு, இயற்கையோடு இணைந்த வாழ்வு (2010), அறநெறிக்கதைகள் (2014) ஆகிய இரு நூல்கள் என்பன இவரது படைப்புக்களாகும். லண்டனிலும் சட்டன் தமிழ்ப் பாடசாலையில் தமிழும் சைவமும் போதித்து வந்தவர். இந்நூலில் சிறுவர்க்கும் வளர்ந்தோருக்கும் ஏற்ற வகையில் அன்பு, உண்மை, நேர்மை, பொறுமை, பேராசை தவிர்த்தல், கொடை, தன்னலம் மறுப்பு, ஒற்றுமை போன்ற அறநெறிகளை விளக்கும் வகையில் சிறுகதைகளை எழுதித் தொகுத்திருக்கிறார்.