10072 சைவ நற்சிந்தனைகள்: இலங்கை வானொலியில் வழங்கிய சைவ நற்சிந்தனைகளின் தொகுப்புரை.

இராஜேஸ்வரி ஜெகானந்தகுரு. கொழும்பு: திருமதி இராஜேஸ்வரி ஜெகானந்தகுரு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2013. (தெகிவளை: காயத்ரி பப்ளிக்கேஷன்ஸ், இல. 68, டீ சில்வா வீதி, களுபோவில).

xxxviii, 307 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-8741-65-8.

இலங்கை வானொலியில் கலாபூஷணம் இராஜேஸ்வரி ஜெகானந்தகுரு அவர்கள் வழங்கியிருந்த 110 சைவ நற்சிந்தனைகளின் தொகுப்பு இந்நூல். இந்த நற்சிந்தனைகள் ஆன்மீகச் சிந்தனைகள் பொதிந்துள்ளவையாகவும், அறிவைப் புகட்டுபவையாகவும், மனவெழுச்சி ஊட்டுபவையாகவும் அமைந்துள்ளன.  இந்நூல் இளையோர் முதல், முதியோர் வரை நல்வழிப்படுத்தக்கூடியது. அறம், ஆளுமை, வரலாறு, வழிபாடு, தரிசனம், தத்துவம் எனப் பலதரப்பட்ட கட்டுரைகள் இந்நூலில் அமைந்துள்ளன.

ஏனைய பதிவுகள்