மேழிவாசர் (இயற்பெயர்: வ.செல்லையா). யாழ்ப்பாணம்: வ.செல்லையா, சித்திரமேழி, இளவாலை, 1வது பதிப்பு, சித்திரை 1992. (கொழும்பு 13: நியூசென்ட்ரல் அச்சகம்).
30 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.
வித்துவான் சைவப்புலவர் வ. செல்லையா அவர்களின் சொற்பொழிவுத் திரட்டு இதுவாகும். சித்திரமேழி இளவாலை ஞானவைரவர் ஆலயத்தில் கூட்டுப் பிரார்த்தனை தினங்களில் நடாத்தப்பெற்ற சொற்பொழிவுகளில் பெரிய புராணத்திலும் திருவிளையாடற் புராணத்திலும் இடம்பெற்ற நீதிக்கதைகளே இவை. முதலாவது கதை ‘அருமந்த அரசாட்சி’ என்ற தலைப்பில் மனுச்சோழனுடைய நீதி இடம்பெறுகின்றது. தெய்வ நீதி, பாதகத்துக்குப் பரிசு, மன்றுளான் மன்றில், சிவவேடச் சிந்தையர், தெய்வத் திருமுகம், கொள்கை தவறாப் புனிதர், அறிவுடை அமைச்சரானார், திருத்தொண்டர் தொகை எழுந்த கதை, இலச்சினை இணைந்தது ஆகிய தலைப்புகளில் எஞ்சிய ஒன்பது கதைகளுமாக மொத்தம் 10 கதைகள் இந்நூலில் இடம்பெறுகின்றன. சமயக் கல்வி பயிலும் சைவ மாணாக்கர்களுக்கும் சைவ ஆசிரியர்களுக்கும் பயன்தரக்கூடியவகையில் இந்நீதிக்கதைகள் எழுதப்பெற்றுள்ளன.