நகுலா சிவநாதன். ஜேர்மனி: திருமதி நகுலா சிவநாதன், Ludinghausener str-12A, 59379 Selm, 1வது பதிப்பு, மாசி 2015. (யாழ்ப்பாணம்: பிரிண்ட் மாஸ்டர், கொக்குவில்).
(2), iii, 19 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ.
யாழ்ப்பாண மாவட்டத்தின் சிறுப்பிட்டிக் கிராமத்தில் பிறந்து வளர்ந்து, தாவடியில் வாழ்ந்து, பின்னாளில் ஜேர்மனியில் புலம்பெயர்ந்து வாழும் திருமதி நகுலா சிவநாதன் புகலிடத்தில் வெளியிட்டுள்ள பல நூல்கள் சிறுவர்களுக்கும் இளையோர்களுக்கும் உரியவையாகும். அவர்கள் தம்மை நல்வழிப்படுத்தி முன்னேறவும், வாழ்வில் ஒரு குறிக்கோளை ஏற்படுத்திக்கொள்ளும் உளத்திடத்தையும் நம்பிக்கையையும் வலியுறுத்தும் நோக்கோடு இவை அவ்வப்போது எழுதப்பட்டவை. அவ்வகையில் மற்றுமொரு நூலாக இச்சிறுநூல் அமைகின்றது. இதில் நகுலாவின் 160 பொன்மொழிகள் இடம்பெற்றுள்ளன.