த.இராமநாதபிள்ளை. பருத்தித்துறை: த.இராமநாதபிள்ளை, 1வது பதிப்பு, ஆனி 1935. (யாழ்ப்பாணம்: சைவப்பிரகாச யந்திரசாலை).
(2), 131 பக்கம், விலை: ரூபா 1.00, அளவு: 21.5×14 சமீ.
இது பூர்வ யவனபுரவாசிகளின் (கிரேக்கவாசிகளின்), அறநெறிகளை ஆராய்ந்து, பிளேற்றொ என்னும் ஞானியாரின் முதல் மாணாக்கன் அரிஸ்தாதில் என்னும் கலைஞர் யவன பாஷையில் (கிரோக்க மொழியில்) விரிவுற எழுதிய ஒழுக்கநூலின் ஆங்கில மொழிபெயர்ப்பாகும். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 225982).