அதிவீரராம பாண்டியன் (மூலம்), அகளங்கன் (உரையாசிரியர்). வவுனியா: திருவாளர் சீ.ஏ. இராமஸ்வாமி அவர்களின் மணிவிழாக்குழு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2000. (அச்சக விபரம் தரப்படவில்லை).
xxiii, 16 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ.
வவனியா இந்த மாமன்றத்தின் தலைவரும் வர்த்தகப் பிரமுகரும் ச5க செவையாளரமான திருவாளர் சீ.ஏ.இராமஸ்வாமி அவர்களின் அகவை அறுபது நிறைவைக்கறிக்க மகமாக 15.09.2000 அன்று நடைபெற்ற மணிவிழாவில் வெளியிடப்பெற்ற நறுந்தொகை அறநூலான வெற்றிவேற்கை தமிழ்மணி அகளங்களின் உரையுடன் கூடியதாக அமைந்துள்ளது. தமிழில் பிற்காலத்தில் எழுந்த நீதிநூல்களுள் ஒன்று நறுந்தொகை ஆகும். இது வெற்றிவேற்கை எனவும் அறியப்படும். அதிவீரராம பாண்டியர் என்பவர் இந்த நூலின் ஆசிரியராவார் என்ற செய்தி இந்நூலின் பாயிரத்தில் காணக் கிடைக்கிறது. அதிவீரராமர் கொற்கை என்னும் நகரை ஆண்ட ஒரு பாண்டிய மன்னர் என்று பாயிரத்தின் வழியாக அறியமுடிகின்றது. இவரின் காலம் கி.பி. 11 அல்லது 12ம் நூற்றாண்டாக இருக்க வேண்டும் என்று ஆய்வறிஞர்கள் கருதுகின்றனர். இளைஞர்கள் நல்ல நெறிகளை அறிய வேண்டி நல்ல சொற்றொடர்களால் இந்நூல் யாக்கப்பெற்றுள்ளது. நறுந்தொகை என்பது நல்லனவாகிய நீதிகளின் தொகை என்று பொருள்கொள்ளப் பட்டு, பழைய நீதிநூல்களின் சாரமாக அமைந்த எளிமையான நூல் என்று உரைக்கப்படும். மேலும் இந்நூலின் சில சொற்றொடர்கள் புறநானூறு, நாலடியார் போன்ற நூல்களின் பாக்களோடு சொல்லோடும், பொருளோடும் ஒத்தும் இருக்கின்றன. இந்நூல் எண்பத்தியிரண்டு எளிமையான சொற்றொடர்களால் ஆனது.‘எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும்’, ‘கல்விக்கு அழகு கசடுஅற மொழிதல்’, ‘உண்டிக்கு அழகு விருந்தோடு உண்டல்’, ‘ஞானிக்கு இல்லை இன்பமும் துன்பமும்’ என்பன போன்ற எளிமையானதும் பொருள் செறிந்ததுமான தொடர்களைக்கொண்டது.