சாந்தி நாவுக்கரசன் (பதிப்பாசிரியர்), தேவகுமாரி ஹரன் (உதவிப் பதிப்பாசிரியர்). கொழும்பு 4: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, 1வது பதிப்பு, 2015. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
x, 180 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 24.5×18 சமீ., ISBN: 978-955-9233-38-1.
2007இல் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட கருத்தரங்கொன்றில் சமர்ப்பிக்கப்பட்ட உரைகளின் தொகுப்பு. 2013ம் ஆண்டிலிருந்து திருமுறை தொடர்பாக நடாத்தப்படும் தொடர் ஆய்வரங்கின் மூன்றாவது பகுதியாக, 2015இல் இடம்பெற்ற ஆய்வரங்கின் மையப்பொருளாக அமைந்திருந்த திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருமந்திரம் என்பன தொடர்பான ஆய்வுபூர்வமான கட்டுரைகள் சில தொகுக்கப்பெற்று இச்சிறப்பு மலர் வெளியிடப்பட்டுள்ளது. ஒன்பதாந் திருமுறை (வித்துவான் க.வெள்ளைவாரணன்), திருவிசைப்பா ஆசிரியர்கள் (சோ.ந.கந்தசாமி), திருமூலர் வாழ்க்கை வரலாறு (பா.கண்ணப்ப முதலியார்), திருமூலர் காலம் (பா.கண்ணப்ப முதலியார்), திருமூலரின் சிறப்பு (பா.கண்ணப்ப முதலியார்), திருமந்திரம் (தேவ. பேரின்பன்), திருமந்திரம் அமைந்துள்ள முறை (பா.கண்ணப்ப முதலியார்), திருமந்திரத்தின் பெருமை (சம்பந்தம்), திருமந்திரம் பற்றிய சில அரிய குறிப்புக்கள் (பா.கண்ணப்ப முதலியார்), திருமூலரின் சமயம் (கரு.ஆறுமுகத் தமிழன்), திருமூலரின் சுத்த சைவம் (அருணன்), திருமூலர் கண்ட சிவம் (பேராசிரியர் சி.தில்லைநாதன்), திருமூலரின் மெய்யியல் (கரு.ஆறுமுகத் தமிழன்), திருமூலரின் சமூகநல நோக்கு (கரு.ஆறுமுகத் தமிழன்), திருமந்திரமும் தம்மபதமும் (நா.செல்லப்பா), திருமந்திரமும் சித்தர் சிந்தனைகளும் (நா.சுப்பிரமணியன், கௌசல்யா சுப்பிரமணியன்), திருமந்திரமும் சிவஞானபோதமும் (நா.செல்லப்பா) ஆகிய 17 ஆய்வுக் கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.