ஸ்ரீமத் சுவாமி கெங்காதரானந்தா (மூலம்), தா.சியாமளாதேவி (தொகுப்பாசிரியர்). திருக்கோணமலை: சிவயோக சமாஜம், சுவாமி கெங்காதரானந்தா சமாதி, 68, பிரதான வீதி, 1வது பதிப்பு, மார்ச் 2000. (திருக்கோணமலை: உதயன் பிரின்டர்ஸ், 39 அருணகிரி வீதி).
iv, 66 பக்கம், விலை: ரூபா 40., அளவு: 20×13.5 சமீ.
அருள்மிகு ஸ்ரீமத் சுவாமி கெங்காதரானந்தா அவர்களின் 9வது ஆண்டு நிறைவு குருபூஜை தினத்தன்று (06.03.2000) செல்வி தா.சியாமளாதேவி அவர்களால் தொகுக்கப்பட்ட சுவாமியவர்களினால் எழுதப்பட்டு முன்னர் வெளியிடப்படாதிருந்த பதினான்கு கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. தார்மீகப் புரட்சி, வாழ்வதெப்படி?, இலட்சிய வாழ்க்கை, ஆத்மவிசாரம், நாதோபாசனை, மந்திரயோகம், தியான சாதனை, இன்றைய உலகப் பிரச்சினைகளுக்கு வேதாந்தம் கூறும் வழி என்ன?, கடந்த காலங்கள் (இந்துக்களின் சிந்தனைக்கு), சித்தசோதனை (1), சித்தசோதனை (2), சித்தசோதனை (3), சும்மா இரு, அபூர்வ சிந்தனை, வஜனாம்ருதம் (மூன்றாம் பாகம்) ஆகிய ஆக்கங்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 39308).