சபா.சிவப்பிரகாசம்பிள்ளை (உரையாசிரியர்), மா.வேதநாதன் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவசித்தாந்த ஆய்வ நிறுவனம், 2வது பதிப்பு, 2009, 1வது பதிப்பு, 1960. (யாழ்ப்பாணம்: மகுடம் அசோஷியேட்ஸ், இணுவில்).
xxiv, 111 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20×14 சமீ.
சிதம்பரம் சுத்தாத்துவித சைவ சித்தாந்தப் பேராசிரியர் சபா சிவப்பிரகாசம் பிள்ளை 1960இல் வெளியிட்டிருந்த இந்நூல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிகத்துறைத் தலைவர் கலாநிதி மா.வேதநாதன் அவர்களால் மீள்பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. சிவஞானபோதத்தைக் கற்கும் மாணவர்களுக்கு ஒரு சிறந்த சைவசித்தாந்தக் கைநூலாகக் கருதப்படும் இந்நூலில், சிவஞானபோதச் சிற்றுரை எழுதிய சிவஞான முனிவரின் ஆளுமைத் திறன் அறியவேண்டும் என்பதற்காக இந்நுலில் அவரது வரலாறும் காஞ்சிப் புராணம் (1937) நூலிலிருந்து சேர்க்கப்பட்டுள்ளது. சிவஞானபோத சூத்திரப் பொருளை ஆங்கிலம் கற்றோரும் அறிந்து நயக்கும் உணர்வில் தருமபுர ஆதின சைவசித்தாந்த உயர் ஆய்வுமைய இயக்குநர் சைவத்திரு கலாநிதி டி.என்.இராமச்சந்திரன் எழுதிய ஆங்கில மொழிபெயர்ப்பும் இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 50083).