செல்லையா சிவபாதம் (உரையாசிரியர்). யாழ்ப்பாணம்: செ.சிவபாதம், காலையடி ஞானவேலாயுத சுவாமி தேவஸ்தான வெளியீடு, பணிப்புலம், பண்டத்தரிப்பு, 1வது பதிப்பு, ஐப்பசி 2001. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).
(14), 34 பக்கம், விலை: ரூபா 50., அளவு: 22×14 சமீ.
சைவ சந்தான குரவர் நால்வருள் முதல்வராகிய மெய்கண்ட தேவர் அருளிய சிவஞானபோதம்.
செல்லையா சிவபாதம் (உரையாசிரியர்). யாழ்ப்பாணம்: செ.சிவபாதம், காலையடி ஞானவேலாயுத சுவாமி தேவஸ்தான வெளியீடு, பணிப்புலம், பண்டத்தரிப்பு, 3வது பதிப்பு, மார்ச் 2012, 1வது பதிப்பு, ஐப்பசி 2001. (அச்சக விபரம் தரப்படவில்லை).
53 பக்கம், விலை: ரூபா 80.00., அளவு: 22×15 சமீ.
சைவ சந்தான குரவர் நால்வருள் முதல்வராகிய மெய்கண்டதேவர் அருளிய சிவஞானபோதமும் அதற்கான கந்தபுராண மேற்கோள்களுடன் கூடிய உரையும், சைவசித்தாந்த பண்டிதர் செ.சிவபாதம் அவர்களால் இந்நூலில் வழங்கப்பட்டுள்ளது. சிவஞானபோதம் தரும் செய்தி பதி, பசு, பாசம் பற்றியது. பிரபஞ்ச உற்பத்தி, திதி, ஒடுக்கம் ஆகிய கிருத்தியங்களை நிகழ்த்தும் பதி, இவற்றால் பயனடையும் பசு, இவற்றிற்கேதுவான பாசம் முதலியவற்றின் பிரமாணம் இலக்கணம், சாதனம், பயன் அனைத்தையும் விளக்குவதே சிவஞானபோதமாகும். 40 வரிகள், 216 சொற்கள், 624 எழுத்தக்கள் என மிகச்சிறியதும் மிக ஆழமானதுமான சிவஞானபோதத்தையும், யாழ்ப்பாண மக்களின் கலாச்சாரமாகவே கருதப்படும் கந்தபுராணத்தையும் ஒப்புநோக்கி இலகு தமிழில் இந்நூலை ஆசிரியர் படைத்துள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 29148).