குமாரதேவ வள்ளலார், ச.கந்தையபிள்ளை. தமிழ்நாடு: புதவை நந்தி வெளியீட்டு மன்றம், 2வது பதிப்பு, 1929, 1வது பதிப்பு விபரமில்லை. (அச்சக விபரம் தரப்படவில்லை).
48 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 16.5×11 சமீ.
விருத்தாசலம் சைவப்பெரியார் குமாரதேவ வள்ளலார் அருளிச்செய்த சுத்தசாதகம் என்ற இந்நூல், கொழும்பு அரசினர் ஆசிரிய கல்லூரியிலும் வித்தியாநிலையத்திலும் தமிழ்ப்பண்டிதராயிருந்தவரும் சுன்னாகம் வித்துவசிரோமணி அ.குமாரசுவாமிப் புலவர் அவர்களின் மாணவருள் ஒருவருமாகிய யாழ்ப்பாணம் தென்கோவை ச.கந்தையபிள்ளையவர்கள் எழுதிய உண்மை முத்தி நிலை என்னும் விடயத்தோடு இணைந்ததாகப் பதிப்பிக்கப்பெற்றுள்ளது. அன்பே சிவம் என்னும் உண்மைச் சைவம் என்றால் என்ன என்பதை அறியாமையைக் களைந்து விபரிப்பதாக செய்யுள் வடிவிலான இந்நூல் அமைந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 4287).