சோ.கிருஷ்ணராஜா. கொழும்பு 7: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், இல. 98, வோட் பிளேஸ், 1வது பதிப்பு, மார்கழி 1995. (கொழும்பு 12: குமரன் அச்சகம், 201, டாம் வீதி).
ii, 56 பக்கம், விலை: ரூபா 25., அளவு: 22×14 சமீ.
இந்நூல் சைவசித்தாந்த அறிவாராய்ச்சியியல் பற்றிச் சுருக்கமாக விளக்குகின்றது. இதன் முதல் வரைவு ‘பண்பாடு’ இதழில் 1993இல் வெளிவந்தது. திருத்திய வடிவம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட ஆய்வரங்கொன்றில் படிக்கப்பெற்றது. அதன் திருத்திய வடிவம் இந்நூலாக வெளியிடப்பட்டுள்ளது. அறிமுகம், அறிவாராய்ச்சியியலில் ஐயம், காட்சிக் கொள்கை, அனுமானக் கொள்கையும் அதன் தருக்க அறிவாராய்ச்சியியல் அம்சங்களும், சப்தப் பிரமாணம் அல்லது உரையளவை, முறையியல் உத்திகள் ஆகிய ஆறு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நூலாசிரியர் கலாநிதி சோ.கிருஷ்ணராஜா யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மெய்யியல்துறைத் தலைவராவார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 19371).