ஆர்.கே.முருகேசு சுவாமிகள். கொழும்பு 2: இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், 9வது மாடி, காப்புறுதி இல்லம், 21,வொக்ஷோல் வீதி, 1வது பதிப்பு, பதிப்பு விபரம் அறியமுடியவில்லை.(கொழும்பு 2: ராஜன் பிரின்டர்ஸ், 37/2 வொக்ஷோல் லேன்).
28 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 19.5×14.5 சமீ.
நுவரெலியாவில் (ஸ்ரீ காயத்ரி பீடம், ஸ்ரீ நகர், 82, லேடி மெக்கலம்ஸ் ட்ரைவ்) அமைந்துள்ள ஸ்ரீ காயத்ரி பீடாதிபதி காயத்ரி சித்தர் முருகேசு சுவாமிகளின் ஆன்மீகக் கருத்துக்கள் பொதிந்த நூல். தியானம் பற்றிய விரிவான பல தகவல்களை வாசகருக்கு வழங்குகின்றது.