ஸ்ரீ சாயிமாதா சிவ பிருந்தாதேவி. நாவலப்பிட்டி: ஆத்மஜோதி நிலையம், 1வது பதிப்பு, 1974. (நாவலப்பிட்டி: ஆத்மஜோதி அச்சகம்).
xvi, 108 பக்கம், தகடு, விலை: ரூபா 5., அளவு: 21×13.5 சமீ.
இப்பிறவியில் மனிதன் அலைந்து உழன்று ஆன்மீகத்திலிருந்து விலகிச் செல்கின்றான். பிறப்பு வாழ்வு இறப்பு என்ற மூன்று விடயங்களுக்குள் இறந்தும் வாழும் வழிகளை அறியாது அலைகின்றான். இந்நிலையில் மனிதனை ஆன்மீகவழியில் சிந்தித்து வாழ்வை புண்ணிய வாழ்வாக்கும் வழிமுறைகளைப் போதிப்பதாக ஸ்ரீ சாயிமாதா சிவ பிருந்தாதேவி அம்மையாரின் உரைகள் அமைந்துள்ளன. சைவப்பற்றும் தத்துவ ஞானங்களின் அனுபூதிச் செல்வமுமாய் மாதாஜி வழங்கியுள்ள உபதேசங்கள் இவை. இயற்கையும் தெய்வீகமும் ஒன்றாய் இணைந்து, உபநிடத ஞானத்திலும் ஆழ்வாராதியர் பக்தியிலும் தோய்ந்த பேச்சுக்கள் இவை. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 97928).