மு.இளையதம்பி. யாழ்ப்பாணம்: மு.இளையதம்பி, 2வது பதிப்பு, 1986, 1வது பதிப்பு, 1978. (யாழ்ப்பாணம்: ஈகிள் பிறிண்டிங் வேக்ஸ் லிமிட்டெட், 161, சிவன் பண்ணை வீதி).
(15), 215 பக்கம், விலை: ரூபா 32., அளவு: 24×17 சமீ.
அறிவியல், சாஸ்திரவியல், அநுபவவியல் ஆகிய மூன்று பெரும்பிரிவுகளின் கீழ் ஆசிரியர் தனது சிந்தனைகளைப் பதிவுசெய்துள்ளார். அறிவியல் என்ற முதற் பிரிவில் சைவசித்தாந்தம், மானிடப்பிறவியின் மாண்பு, பிறப்பும் இறப்பும், தூய்மை, அறம், அன்பு, கொல்லாமை, கல்வி, நன்மையும் தீமையும், ஊழ் ஆகிய 10 தலைப்புகளில் கட்டுரைகள் இடம்பெறுகின்றன. இரண்டாம் பிரிவான சாஸ்திரவியலின் கீழ் தத்துவங்கள் 96, பதி, பசு, பாசம், ஞானசாதனங்கள், உண்மை ஞானமும் தசகாரியமும், அத்துவாக்கள், பஞ்சாட்சரத்தின் மகிமை, சித்தாந்த சாத்திரங்கள், இறைவழிபாடு ஆகிய 10 கட்டுரைகளும், அநுபவவியல் என்ற இறுதிப் பிரிவில் நாயன்மார் காட்டிய வழி, இறைவனின் காட்சி, பக்தி, இயற்கை தரும் அறிவு, உலக வாழ்க்கையும் அதன் பயனும், சன்மார்க்கம், தன்னை அறிந்தால் தலைவனை அறியலாம், சைவசமயாசாரங்கள், சிவவழிபாடு தரும் அநுபவம், எல்லாம் நீ ஆகிய பத்துக் கட்டுரைகளும் அடங்கியுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 84031).