வடிவேலு செட்டியாரவர்கள் இயற்றிய தெளிபொருள் விளக்கவுரையைத் தழுவிய சிற்றுரையும்.மெய்கண்ட தேவர் (மூலம்), கோ.வடிவேலு (உரையாசிரியர்). கொழும்பு 12: சி.அருணாசலம், தாளையான் ஆத்மார்த்த அந்தரங்கக் கூட்டத்தவர், 178, டாம் வீதி, 1வது பதிப்பு, ஜுன் 1971. (கொழும்பு 12: தாளையான் அச்சகம், 178, டாம் வீதி).
viii, 57 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 15×13 சமீ.
மெய்ஞ்ஞானிகளால் போற்றப்பட்டு வரும் சிறந்த ஞான நூல்களில் திருவெண்ணெய் நல்லூர் மெய்கண்டதேவர் தமிழில் அருளிய சிவஞானபோதம் என்னும் அத்வைத ஞானசாஸ்திரமும் ஒன்றாகும். இந்நூலுக்கான தெளிவுரையை ஸ்ரீமத் கோ.வடிவேலு செட்டியார் தெளிபொருள் விளக்கவுரையாக எழுதித் தமிழகத்தில் வெளியிட்டிருந்தார். இந்நூல் சிவஞான போத மூலத்தையும், கோ.வடிவேலு செட்டியார் எழுதிய விளக்கவுரையை மேலதிக குறிப்புடனும் உள்ளடக்குகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 10746).