சாந்தி கேசவன். மட்டக்களப்பு: ராஜாஸ் புத்தக நிலையம், 111, பிரதான வீதி, 2வது பதிப்பு, 1995, 1வது பதிப்பு விபரம் தரப்படவில்லை. (அச்சக விபரம் தரப்படவில்லை).
48 பக்கம், விலை: ரூபா 79., அளவு: 26.5×20.5 சமீ.
வர்த்தகரீதியில் கல்வித் துணை நூல் வெளியீடுகளை வெளியிடுவதில் அக்கறைகொண்ட ராஜாஸ் புத்தக இல்லத்தின்; இரண்டாவது வெளியீடு இதுவாகும். கல்விப் பொதுத் தராதரப் பத்திர, புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாக இது தயாரிக்கப்பட்டுள்ளது. கல்வித் திணைக்களத்தின் ஆசிரிய ஆலோசகரான திருமதி சாந்தி கேசவன், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறையின் பகுதிநேர விரிவுரையாளராகவும் பணியாற்றியவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 123848).