ஜோஸ்யர் ஸச்சி. யாழ்ப்பாணம்: டேவிட் லிகோரி பதிப்பாலயம், 38, வேம்படி வீதி, 1வது பதிப்பு, ஜுன் 1987. (யாழ்ப்பாணம்: ஆரெஸ் பிரின்டர்ஸ், 40/1, நாவலர் வீதி).
ii, 40 பக்கம், விலை: ரூபா 6.50, அளவு: 17×11 சமீ.
நியுமராலொஜி என்னும் எண் சோதிட (சாஸ்திர) நூல். சோதிடக்கலையிலே எண்கள் முக்கியத்துவம் வாய்ந்தன. துல்லியமான கணிப்பீட்டுக்கு கணிதம் அவசியம். இந்நூல் 19 பிரிவுகளில் எழுதப்பட்டுள்ளது. எண்களின் தோற்றம், எண்களின் வகைகள், எண்களும் கிரகங்களும், எண்களின் செயல்பாடு, எண்ணிலே வாழ்வு, எண்ணிலே திகதி, எண்ணிலே பெயர், எண்ணிலே திருமணம், எண்ணிலே அதிர்ஷ்டம், எண்ணிலே நாளும் கோளும், எண்ணிலே தொழில்கள், எண்ணிலே நண்பர், எண்ணிலே வியாதி, எண்ணிலே பரிகாரம், 31 திகதிகளில் பிறந்தவர்களுக்கு தனித்தனியான பலன்கள், பெண்களைப்பற்றி எண்கள், அதிர்ஷ்ட மாதங்கள், அவசியமான குறிப்புகள், தெய்வீக வாழ்வில் எண்கள் ஆகிய 19 தலைப்புகளில் இந்நூல் விரிகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 84688).