மொழிவாணன். தெகிவளை: காயத்திரி பப்ளிக்கேஷன்ஸ், தபால் பெட்டி எண் 64, 1வது பதிப்பு, மார்ச் 2014. (தெகிவளை: காயத்திரி பப்ளிக்கேஷன்ஸ், தபால் பெட்டி எண் 64).
120 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-8741-66-5.
வாஸ்து சாஸ்திரம் சம்பந்தமாக தினகரன் வார மஞ்சரியில் தொடராக வெளிவந்த ஆக்கங்களின் தொகுப்பாக நூலுருவில் வெளிவந்துள்ளது. வாஸ்து என்றால் என்ன? பணப்புழக்கம் செழிப்பாக இருக்க என்ன செய்யவேண்டும்? வீட்டை எப்படிக் கட்ட வேண்டும்? புதிய வீடு கட்டும்போது கவனிக்கவேண்டியவை, பணத்தைச் சேமிக்க என்ன செய்யவேண்டும்? வீட்டின் கதவுக்கு முன்னால் என்ன இருக்கவேண்டும்? பணம் வைக்கும் அலுமாரியை எங்கே வைக்கவேண்டும்? உடைந்துபோன பல்புகளை வீட்டுக்குள் வைக்காதீர்கள், சாப்பாட்டு மேசையை வைக்கச் சிறந்த இடம் எது? அலுவலகத்தில் நீங்கள்அமரும்போது பின்னால் என்ன இருக்கக்கூடாது? வீட்டில் மீன் வளர்க்கலாமா? மாடிப்படிகள் இருளாக இரூப்பது அதிர்ஷ்டமா? தென்மேற்குப் பக்கத்தில் சமையலறை இருக்கக்கூடாது, திசைகளை அறிவோம், உங்கள் காதல் நிறைவேற வாஸ்து துணைபுரிகிறதா? சமையல் அறையில் என்ன பழங்களை வைக்கவேண்டும், வீட்டில் ஆமை வளர்க்கலாமா? வாசல் கதவு எப்படி இருக்கவேண்டும்? வாங்கிய காணியில் வீடுகட்ட ஏன் தாமதமாகின்றது? படுக்கை அறையில் கண்ணாடிஇருந்தால்? பிள்ளைகள் பெற்றோருக்கு கடிகாரங்களைப் பரிசாகக் கொடுக்கலாமா? என்பனபோன்று இன்னொரன்ன 38 தலைப்புகளில் இந்நூல் விரிகின்றது.