10095 இயேசு புராணம்.

ஈழத்துப் பூராடனார். (இயற்பெயர்: க.தா.செல்வராஜகோபால்), பசுபதி வியற்றிஸ் செல்வராசகோபால் (தொகுப்பாசிரியர்). எட்வேட் இதயச்சந்திரா (பதிப்பாசிரியர்). கனடா: நிழல் வெளியீடு, ஜீவா பதிப்பகம், 1183 பொரஸ்ட்வுட் டிரைவ், மிஸிஸ்சாகா, ஒன்ராரியோ L5C 1H6, 1வது பதிப்பு, ஆவணி 1986. (கனடா: ஜீவா பதிப்பகம், றிப்ளக்ஸ் அச்சகம். 1183 பொரஸ்ட்வுட் டிரைவ், மிஸிஸ்சாகா, ஒன்ராரியோ L5C 1H6).

xxxii, 412 பக்கம், விலை: கனேடிய டொலர் 25., அளவு: 21×14 சமீ.

பரமபிதாப் பருவம், பரமசுதன் பருவம், பரிசுத்தாவிப் பருவம் ஆகிய மூன்று பிரதான பருவங்களின்கீழ் பாடப்பெற்ற இயேசுவின் வரலாற்றுக் காவியம். முதலாம் பருவமாகிய பரமபிதாப் பருவம் உலகோற்பத்திச் சுருக்கம் (பரமபிதா இலக்கணப் படலம், உலக உற்பத்திப் படலம், பவ உற்பத்திப் படலம், பவப் பெருக்கப் படலம், பரமபிதா நொந்துறு படலம்), பரம ஈவுச் சுருக்கம் (புத்துலகு செய்யும் சிந்தனைப் படலம், அடியாரைக் காக்கவருள்சொரி படலம், பிரளயப் படலம், உடன்படிக்கைப் படலம், உடன்படிக்கை மீறற் படலம்), பரம தேர்வுச் சுருக்கம் (ஆபிரகாமைத் தேர்ந்தெடுத்த படலம், யாக்கோபின் வம்சவிருத்திப் படலம், யோசேப்பின் சிறையனுபவப் படலம், இசுரவேலினப் படலம், இயேசு வம்ச வரலாற்றுப் படலம்) ஆகிய மூன்று சுருக்க உப பிரிவுகளைக் கொண்டது. இரண்டாவதான பரமசுதன் பருவம், கன்னி மகன் சுருக்கம் (கன்னி மேரிப் படலம், யோசெப்பப் படலம், அவதாரப் படலம், காணிக்கைப் படலம். மனுவாழ்வுப் படலம்), தூதுப்பணிச் சுருக்கம் (திருமுழுக்குப் படலம், குருத்துவப் படலம், சீடத்துவப் படலம், கற்பனைகளைத் தப்பர்த்தம் செய்த படலம், அருளுரை கேட்டோர் படலம்), அற்புதப் பணிச் சுருக்கம் (உவமைப் படலம், இருள்வருகை ஆயத்தப் படலம், போதனைப் புரட்சிப் படலம், அற்புதப் படலம், வஞ்சனைப் படலம்), ஆகிய மேலும் மூன்று சுருக்கங்களைக் கொண்டது. இறுதிப் பருவமான பரிசுத்தாவிப் பருவம், பலியாகி உயிரீந்த சுருக்கம் (காட்டிக்கொடுத்த படலம், குற்றச்சாட்டுப் படலம், குற்ற நிருபணப் படலம், தீர்ப்புப் படலம், சிலுவைப் படலம்), உயிர்த்தெழுந்த சுருக்கம் (திருவடக்கப் படலம், யூதாசுக் காரியோத்தன் படலம், அவலமுறு படலம், கல்லறைப் படலம், தரிசனந் தந்த படலம்), கிறித்துவ நம்பிக்கைச் சுருக்கம் (தூதுப்பணி ஆரம்பப் படலம், இரத்த சாட்சிப் படலம், சவலைப் பவுலாக்கிய படலம், திருமறைப் படலம், கிறித்தவப் பண்புப் படலம்) ஆகிய மூன்று சுருக்கங்களையும் கொண்டுள்ளன. அடைப்புக்குறிக்குள் உள்ளவை சுருக்கங்களின் உப பிரிவுத் தலைப்புகளாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 19330).

ஏனைய பதிவுகள்