ஜே.ஈ.ஜெயசீலன். யாழ்ப்பாணம்: வளன் ஆச்சிரமம், 49, 6ம் குறுக்குத் தெரு, 2வது பதிப்பு, மார்ச் 2006, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2003. (யாழ்ப்பாணம்: அன்னை அச்சகம், குருநகர்).
(4), 144 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 20.5×14.5 சமீ.
கலாநிதி சுவாமி ஜே.ஈ.ஜெயசீலன் அவர்கள் எழுதிய இறையியல் வரலாற்று நூல். ஆகிர்தா மேரி எனும் புனித துறவி எழுதிய ‘பரம இரகசியப் பட்டணம்’ என்ற ஸ்பானிய நூலே 1874இல் ‘தேவமாதாவின் அற்புதமான சரித்திரம்’ என்ற பெயரில் 48 அத்தியாயங்களில் தே.மரிஞானப்பிரகாச சுவாமிகளால் தமிழாக்கம் செய்யப்பட்டது. ‘பரம இரகசியப்பட்டணம்’ என்ற அந்நூலே வீரமாமுனிவரின் தேம்பாவணி நூலுக்கும் அமெரிக்க திரைப்பட நடிகர்ஃதயாரிப்பாளர் மெல் கிப்சன் நெறிப்படுத்திய ‘கிறிஸ்துவின் பாடுகள்’ என்ற பிரபல்யமான ஆங்கிலத் திரைப்படத்திற்கும் உந்துசக்தியாக அமைந்தது. அதே நூலை ஆதாரமாகக்கொண்டு கலாநிதி சுவாமி ஜே.ஈ.ஜெயசீலன் எழுதியிருந்த ‘தேவதாயின் அற்புத வரலாறு’ என்ற வரலாற்றுத் தொடர், யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த மறைமாவட்ட இதழான ‘தேவதாயின் குரல்’ இதழ்களில் ஐந்தாண்டுகள் தொடராக வெளிவந்தது. இவ்வரலாற்றுத் தொடரின் நூல்வடிவமே இதுவாகும். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 186608).