மலர்க்குழு. வவுனியா: புனித அந்தோனியார் ஆலயம், இறம்பைக்குளம், 1வது பதிப்பு, 1998. (அச்சக விபரம் தரப்படவில்லை).
xv, 49 பக்கம், விளக்கப்படங்கள், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×15 சமீ.
தூய ஜோசப் வாஸ் முனிவரினால் 1694ம் ஆண்டளவில் ஞானஸ்தானம் பெற்று கத்தோலிக்க மதத்தைத் தழுவிய இறம்பைக்குள மக்கள் அம்முனிவர் தங்கிச்செல்லவெனக் கட்டிய சிறுகொட்டில் இருந்த இடமே அங்கு ஆலயமாக்கப்பட்டதாக வரலாறு. 1888ம் ஆண்டளவில் (15.7.1888) சிறு கொட்டிலாக இருந்த பழைய ஆலயம் இருந்த இடத்தில் நிரந்தரக் கட்டிடத்திற்கான அத்திவாரமிடப்பட்டு புனித அந்தோனியார் ஆலயம் இயங்கியது. 110 ஆண்டுகள் கழிந்த நிலையில் 60 லட்சம் ரூபா செலவில் இறம்பைக்குள மக்களின் அர்ப்பணிப்புடன் கட்டட வேலைகள் பூர்த்தியாக்கப்பட்டு 20.12.1998இல் மன்னார் ஆயர் அதி.வண.இராயப்பு ஜோசப் அவர்களால் ஆசீர்வதிக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது. அதையொட்டி வெளியிடப்பட்ட சிறப்பு மலரான இந்நூலில் யூபிலி ஆண்டு 2000, தூய ஆவி ஆண்டு கொண்டாட திருத்தந்தை வழங்கும் சிந்தனைகள், யார் இந்த தூய ஆவியார், ஆவியாரும் திருச்சபையும், ஆவியாரும் மரியாளும், தூய ஆவியாரும் கிறிஸ்தவரும், உறுதி பூசுதலும் தூய ஆவியாரும், தூய ஆவியின் வரங்கள் கொடைகள் கனிகள், ஆவியாரில் திருமுழுக்கு, தூய ஆவியைப் பெறுவது எவ்வாறு, திருப்பலியில் ஆவியானவர் ஆகிய 11 தலைப்புகளில் இறையியல் கட்டுரைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.