மு.சிங்கராயர். யாழ்ப்பாணம்: தமிழ்மதி, பாசையூர், 1வது பதிப்பு, ஆனி 1992. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம், பிரதான வீதி).
24 பக்கம், புகைப்படம், விலை: ரூபா 25., அளவு: 20.5×14.5 சமீ.
தான் பிறந்த மண்ணான பாஷையூரில் கோயில்கொண்டெழுந்தருளியுள்ள புனித அந்தோனியாரின் பெருமையையும், அவரின் எட்டாத புகழையும், வாழ்வையும் பாடும் கவிதைகளைப் பிரதானமாகக் கொண்ட இந்நூலில் இறைவணக்கம், உயிருள்ள இறைவன், தந்தையும் மைந்தனும், செவ்வாயில் கமழுகின்ற சவ்வாது, கூந்தல் வளர்ந்ததம்மா, பாசையூரானைப் பாடு, மழைபோல் வீழ்ந்தவனே, தலைவனிடம் தூது, தாரகை ஏந்திய தங்கநிலா, தேனுரை கேட்ட மீனினம், தொண்ணூறு ஆடி, தேர் கண்டார் தேரே கண்டார், பதுவை தந்த முத்தே வாழ்க என்று 13 தலைப்புகளில் எழுதப்பட்ட கவிதைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 86734).