எஸ்.ஜெபநேசன். யாழ்ப்பாணம்: தென்னிந்திய திருச்சபை, யாழ். ஆதீனம், 1வது பதிப்பு, மார்ச் 1994. (யாழ்ப்பாணம்:அமெரிக்கன் இலங்கை மிஷன் அச்சகம்).
(7), 100 பக்கம், தகடுகள், விலை: ரூபா 100., அளவு: 20×14 சமீ.
யாழ்ப்பாணத்துக் கிறிஸ்தவ கவிஞர் பரம்பரை பலவித சிறப்புக்களையுடையது. அமெரிக்கன் மிஷன்மாரின் கல்விப் பணியினாலே கவரப்பட்ட சிறந்த தமிழ்ப் புலவர்களே கிறிஸ்தவ மதத்தைத் தழுவினார்கள். இவர்களில் சிலர் மீண்டும் மதம் மாறியபோதிலும், கிறிஸ்தவ இலக்கியத்துக்கு அவர்கள் வழங்கிய இலக்கியங்கள் சாகாவரம் பெற்றவை. இந்நூலில் ஆர்னல்ட் சதாசிவம்பிள்ளை, ஜெர்மையா எவாட்ஸ் கனகசபைப்பிள்ளை, வண.ஜே.எஸ்.கிறிஸ்மஸ் அடிகளார், றொபர்ட் பிறெக்கன்றிட்ஜ், வண. டி.பி.நைல்ஸ், சி.வை.தாமேதரம்பிள்ளை, புலவர் எஸ்.எஸ். எரெமியா, பேராசிரியர் அலன் ஆபிரஹாம் அம்பலவாணர், வண. பிரான்ஸிஸ் கிங்ஸ்பரி அழகசுந்தரதேசிகர், நொத்தாரிசு எஸ்.கந்தையாபிள்ளை, கவிஞர் தோமஸ் ஹட்சன் பரமசாமி, சின்னண்ணன் வண. ஈ.த. இயேசுசகாயம், விடிவெள்ளி க.பே.முத்தையா, அறிஞர் ஏ.எம்.கே. குமாரசுவாமி, பண்டிதர் ஜே.எஸ்.ஆழ்வார்பிள்ளை, முகாந்திரம் ஏ.பி.குமாரகுலசிங்கி, வித்தகர் ஜே.வி.செல்லையா, பாவலர் தெ.அ.துரையப்பாபிள்ளை ஆகிய 18 கிறிஸ்தவ கவிஞர்களையும் அவர்களது கீர்த்தனைகளையும் நமக்கு அறிமுகம் செய்கின்றார். இந்நூல் தென்னிந்திய திருச்சபையின் யாழ்ப்பாண அத்தியட்சகர், பேராயர் கலாநிதி எஸ்.ஜெபநேசன் அவர்களால் எழுதப்பட்டது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 105721).