பிக்கு போதி பாலர், எ.அசோகன், வி.குமாரசாமி. நுகேகொட: பிக்கு உடுவன இரத்தினபால தேரர், பௌத்த ஆராய்ச்சி நூலகம், இல. 36, சொரட மாவத்தை கங்கொடவில, 1வது பதிப்பு, மே 2002. (மஹரகம: தரஞ்ஜி பிரின்ட், ஹைலெவல் வீதி, நாவின்ன).
xv, 240 பக்கம், வரைபடம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13.5 சமீ.
சங்கைக்குரிய நாரத தேரர் அவர்களின் ‘புத்தரும் அவர்தம் போதனைகளும்’ (The Buddha and His Teachings) என்ற ஆங்கில நூலைத் தழுவி எழுதப்பட்டு, ஸ்ரீநந்தீஸ்வர கிரந்தமாலா நூல் தொடரில் 4ஆவது பிரசுரமாக வெளிவந்துள்ள நூல் இது. பிறப்பு முதல் துறவு வரை, மெய்யொளிக்கான போராட்டம், புத்த நிலை, மெய்யொளி பெற்ற பின்னர், தம்மத்தை விளக்க அழைப்பு, முதலாம் பேருரை, தம்ம போதனை, புத்தரும் அவர்தம் உறவினர்களும்-1, புத்தரும் அவர்தம் உறவினர்களும்-2, புத்தரின் முக்கிய பகைவர்களும் ஆதரவாளர்களும், புத்தரின் அரசவம்சப் புரவலர்கள், புத்தரின் சமயப்பணி, புத்தரின் அன்றாட நடவடிக்கைகள், புத்தரின் பரிநிர்வாணம் ஆகிய 14 இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 212031).