வண.நாரத தேரர் (ஆங்கில மூலம்), செல்வி யசோதரா நடராசா (தமிழாக்கம்). கண்டி: பௌத்த நூல் வெளியீட்டுக் கழகம், 1வது பதிப்பு, 1971. (யாழ்ப்பாணம்: சைவப்பிரகாச அச்சியந்திரசாலை, 450, காங்கேசன்துறை வீதி).
87 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×12.5 சமீ.
தம்மச் சக்கர வெளியீட்டுத் தொடரில் வெளிவந்த இரண்டாவது தமிழ்ப் பிரசுரம் இது. Buddhism in a Nut Shell என்ற தலைப்பில் வண. நாரத தேரரினால் வெளியிடப்பெற்ற மூலநூலின் தமிழாக்கம். பாரத கண்டத்தில் நேபாள தேசத்தில் சித்தார்த்த கௌதமர் கி.மு. 623ஆம் ஆண்டு வைகாசி மாத பௌர்ணமி தினத்தில் சாக்கியகுல இளவரசராகப் பிறந்தவர். ஆடம்பர அரச சுகபோகத்தைத் துறந்து அறவழியில் சென்ற இவர், ஆசியாக் கண்டத்தின் மிக முக்கியமான தத்துவஞானியாகப் பரிணமித்தவர். அவரது பௌத்தக் கொள்கைகள், நடைமுறைகள், சித்தாந்தங்கள் பற்றிப் பேசுகின்ற முக்கிய நூல்களுள் இதுவும் ஒன்று. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 82346).