இரா.மயில்வாகனம். கொழும்பு: சைவநன்மணி இரா.மயில்வாகனம், கொட்டாஞ்சேனை, 1வது பதிப்பு, 1994. (கொழும்பு 13: எம்.ஜி.எம். பிரின்டிங் வேர்க்ஸ் அன்ட் இன்டஸ்ரீஸ், 102/2, ஆட்டுப்பட்டித் தெரு).
xxiv, (8), 74 பக்கம், விலை: ரூபா 70., அளவு: 22×14.5 சமீ.
1990இல் தனது முதலாவது சிந்தனைக் கோவையை (‘சிந்தனைக்கோவை’ என்ற தலைப்பில்) வழங்கிய இரா.மயில்வாகனம் அவர்கள் அதன் இரண்டாவது தொகுதியை இரண்டாவது சிந்தனைக் கோவை என்ற தலைப்பில் வழங்கியுள்ளார். இந்து சமய கலாச்சார இராஜாங்க அமைச்சின் சைவநன்மணி பட்டத்தைப் பெற்ற இவர் ஒன்பதாம் திருமுறை ஒரு நோக்கு என்ற நூலின் ஆசிரியருமாவார். இரண்டாவது சிந்தனைக் கோவையில் ஆனந்த நடராசா, தில்லை, நம்பியாரூரர், உமை அம்மை, ஆலய வழிபாடு, மகாகும்பாபிஷேகம், கோடி நலம்தரும் கோபுர தரிசனம், தமிழர் திருமணக் கோல நடைமுறைகள், அபரக் கிரியையும் அதன் விளக்கமும், இறுதியில் இறைவன் ஆகிய பத்து ஆன்மீகக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.