சகிதேவி கந்தையா (மூலம்), க.சண்முகலிங்கம், வானதி காண்டீபன் (தொகுப்பாசிரியர்கள்). கொழும்பு 6: ஆலயம் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2014. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
(4), 86 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-0881-08-6.
சுன்னாகம் இராமநாதன் மகளிர் கல்லுரியில் ஆசிரியையாகப் பணியாற்றிய திருமதி சகிதேவி கந்தையா (1928-2013), தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 1959ஆம் ஆண்டு இலங்கைப் பல்கலைக்கழகத்தில் (பேராதனை) கல்வியியல் டிப்ளோமா பட்டத்தைப் பெற்றவர். 1940-50 காலகட்டத்தில் இவரது சிறுகதைகள் இலங்கையில் ஊடகங்களில் பரவலாக வெளிவந்தன. அக்காலகட்டத்தில் எழுத்துத்துறையில் ஈடுபட்டிருந்த ஒருசில பெண் எழுத்தாளர்களுள் இவர் குறிப்பிடத்தக்கவராக இருந்துள்ளார். 1960களின் பின்னர் ஆன்மீகத்துறையில் ஈடுபாடு காட்டிய இவர் 1990களில் மீண்டும் எழுத்துத் துறையில் இணைந்துகொண்டார். சென்னையிலும் கலிபோர்னியாவிலும் கழிந்த தனது புகலிட வாழ்வின்போது, 1990-2010 காலப்பகுதியில் இவர் எழுதிய 20 ஆன்மீகக் கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. இருள் நீக்கும் மணிச்சுடர், இந்த நிமிடம் மிக மகத்தானது, தவமும் தவத்திற்கு அப்பாலும், யாழ்ப்பாணம் தந்த அமெரிக்கஞானி, சொல்லற்கரியானைச் சொல்லும் திருக்கோவில்கள் மூன்று, மேற்கில் தோன்றும் உதயம், மகிழ் இனிது மங்கை, ஒரு வாழ்வு தவமாகிறது, சற்குரு சிவாய சுப்பிரமுனிய சுவாமி மகாசமாதி அடைந்தார், குருதேவா, தங்கக் கவிதை, பாவை நோன்பு, ஏழாலையெனும் சித்தாந்தச் சோலை, நட்பு-புனிதமானது, புத்தாண்டு நிறைவு விழா, எஙகள் குருநாதன் எழில் நல்லைவாசன், இராமநாதன் கல்லூரி மாணவியரின் தனித்துவம், எமது சமயம்-அதன் ஒரு பிரதிபலிப்பு, பெருவிழாக் காணும் சிவநேயச் செல்வர்கள், குருபரன் திருவடி வாழ்க ஆகிய 20 தலைப்புகளில் எழுதப்பட்டு இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 54807).