தொல்புரக்கிழார் (இயற்பெயர்: நா.சிவபாதசுந்தரம்). யாழ்ப்பாணம்: அகில இலங்கை வெடியரசன் கலாமன்றம், தொல்புரம், 1வது பதிப்பு, வைகாசி 1988. (யாழ்ப்பாணம்: அச்சக விபரம் தரப்படவில்லை).
(12), 48 பக்கம், சித்திங்கள், விளக்கப்படங்கள், விலை: ரூபா 20., அளவு: 21×14 சமீ.
தொன்மைத் தமிழர்களும் மூவேந்தர்களும் சைவாலயத் திருக்கதவுகள், மாமண்டபங்கள், எழுந்தருளிகளைப் பொன்னாலும்;, வெள்ளிகளாலும் அழகுசெய்தனரேயன்றி மூலஸ்தானம் என்ற கருவறையின் வடிவமைப்பில் கைவைக்கவில்லை என்ற உண்மையை ஆழமாக உணர்ந்துள்ள ஆசிரியர், சமகாலத்தில் வர்த்தகமயப்படுத்தப்பட்டுள்ள கோவில்கள் கருவறையின் சக்தியை மழுங்கடிக்கச்செய்யும் வகையில் அலங்காரமாக்கி பளிங்குக்கற்களால் மெருகுபடுத்தி அழகூட்டியதன் மூலம் கோவில் என்பதன் அர்த்தத்தை முற்றிலும் அறியாமையால் உதாசீனம் செய்து வருகின்றனர் என்ற நிலையில் அவர்களக்கு அறிவூட்டும் நோக்கில் இந்நூலை எழுதியுள்ளார். தொர்புரக்கிழார் பொருணூல் விற்பன்னர், தமிழ்மாமணி புலவர் நா.சிவபாதசுந்தரனார் அவர்கள் சைவக் கோயில்களின் நிர்மாணப்பணியின் மூலவேரினை இக்காலத்தில் அதன் தொடர்புள்ளவர்கள் விளங்கிக்கொள்ளும் வகையில் இந்நூலை எழுதியுள்ளார். முகவுரை (இல்-வாழ்வு, இல்-அற வாழ்வு, கோ-இல்வாழ்வு, கோஇல்-அறவாழ்வு), இறை இல்விளக்கம் (கோஇல்-இறை-இல்லமாதல், இறை-இல்:ஆலயம்), இறை இல்லின் அமைப்பு விளக்கம் (முன்னுரை, புற இல்லம்: பேரொளி, அகப்புறம்: சிற்றொளி, அக இல்லம்: இருளொளி), இறை இல்லம் இறைவிழா இயைபு விளக்கம் (ஆதிமண்டபம்-இலயமூர்த்தம் அகம்-சிவபூசை, கொடித்தம்ப மண்டபம்: போகமூர்த்தம், அகப்புறம்: சீவ(தவ)பூசை, அலங்கார மண்டபம்: அதிகார மூர்த்தி, புறம்-சீவ(தரளம்) பூசை, அலங்கார முறை, ஒளி-ஒலி முறை இயல், நாதசுர இசை முறை, மகோற்சவ காலப் பண்கள், வேத ஒலி முறை, கோவில் வழிபாட்டு முறை, நிறைவுரை) ஆகிய நான்கு இயல்களில் விரிவானமுறையில் இந்நூலை எழுதியுள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 9374).