க.கணேசலிங்கம் (பதிப்பாசிரியர்). லண்டன்: இலண்டன் மெய்கண்டார் ஆதீனம், இணை வெளியீடு, உலக சைவப் பேரவை, லண்டன் தலைமையகம், 72, கிங் எட்வேர்ட் வீதி, லண்டன் E1 7HZ, 1வது பதிப்பு, நவம்பர் 2001. (சென்னை 600 005: மாசறு DTP, 2 பார்த்தசாரதி நாயுடு தெரு, திருவல்லிக்கேணி).
48 பக்கம், விலை: இந்திய ரூபா 15., அளவு: 21.5×14 சமீ.
ஆஞ்சநேய வழிபாடு உள்ளிட்ட சைவத்துக்கொவ்வாத பல வழிபாட்டுமுறைகள் இன்று இலங்கைத் தமிழர்களிடையே புகுத்தப்பட்டு வந்துள்ள நிலையில் கொழும்பிலிருந்து வெளிவரும் சுடர் ஒளி, மற்றும் உலக சைவப் பேரவையின் சைவ உலகம் ஆகிய இரு ஊடகங்களிலும் ஆசிரியர் எழுதிய கட்டுரைகளினது தொகுப்பு இது. முன்னுரை, சிவநெறி நிற்கும் ஈழத்தில் ஆஞ்சநேயர் வழிபாடா?, Intrusion of Practices Alien to Saivism, சைவத்தைச் சிதைக்கும் ஊடுருவல்கள், உயர் சைவத்தில் உடன்பாடற்ற வழிபாடு, ஆஞ்சநேயர் சிவபக்தர் அல்லர், அதிர்ச்சிதரும் சமய நிகழ்வுகள், ஆஞ்சநேயர் இராமபக்தர் மாத்திரமே, சைவ மண்ணில் சைவம் சிதைக்கப்படுகிறது, ஆஞ்சநேயர் சைவர் வழிபாட்டுத் தெய்வமல்ல, சைவர்களே சைவத்தை அழிப்பதா?, சித்தாந்தச் செந்நெறி (பின்னிணைப்பு) ஆகிய 12 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.