சிவனடியான். கொழும்பு 6: மீரா பதிப்பகம், 291/6-5/3A, எட்வேர்ட் அவெனியூ, ஹவ்லொக் டவுன், 2வது பதிப்பு, 2009, 1வது பதிப்பு, 2008. (அச்சக விபரம் தரப்படவில்லை).
32 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×12.5 சமீ.
தெய்வத் திருமுறைகளையும் சிவாகம நூல்களையும் வாசித்து அவற்றில் திருவைந்தெழுத்தாகிய சிவாயநம என்ற நமச்சிவாயத் திருப்பெயரின் சிறப்புகளைக் குறித்துப் பாடப்பெற்ற திருப்பாடல்களான பக்தி இலக்கியங்களைத் தேர்ந்து, அவற்றைத் தொகுத்து இந்நூலை ஆக்கியுள்ளார். திருஞானசம்பந்தர் அருளிய பஞ்சாக்கரத்திருப் பதிகம், நமச்சிவாயத் திருப்பதிகம், சுந்தரமூர்த்தி சுவாமிகள், மணிக்கவாசக சுவாமிகள், திருமூலர், நக்கீரதேவ நாயனார், பட்டினத்தார் ஆகியோரின் பாடல்கள், பெரியபுராணம், சிவஞான போதம், சிவஞானசித்தியார், உண்மை விளக்கம், நெஞ்சுவிடு தூது, திருவருட்பயன், திருவிசைப்பா, பத்திரகிரியார் பாடல்கள் ஆகிய தலைப்புகளில் இந்நூலைத் தொகுத்துள்ளார். சைவ சமயத்தவரின் இல்லங்களில் பாராயணக் கையேடாக வைத்துப் பயன்பெற இந்நூல் உகந்தது.