நா.சோமாஸ்கந்தக் குருக்கள். அவுஸ்திரேலியா: Modern Hindu Cultural Arts Work, 2வது பதிப்பு, 2001, 1வது பதிப்பு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B புளுமென்டால் வீதி).
32 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.
நாமதேவரும் ஞானதேவரும் (பாதாள லோகத்தில் கண்ட காட்சி, நாமதேவர் தரிசனம்), சாங்கதேவரும் ஞானதேவரும் (தேவரின் அற்புதங்கள், மாதவரும்- யாதவரும், நாயும் லிங்கமும், இறந்தவள் பிழைத்த அதிசயம்) ஆகிய இரண்டு கட்டுரைகளுடன் இவ்விரண்டாவது பதிப்பில் ஸ்ரீ நாராயண கவசமும் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது. நா.சோமாஸ்கந்தக் குருக்கள் அவுஸ்திரேலியாவில் திருமணப் பதிவாளராகப் பணியாற்றுகின்றார்.