10120 பக்தி அனுபவம்: கட்டுரைகள்.

கனகசபாபதி  நாகேஸ்வரன் (மூலம்), எஸ்.வை.ஸ்ரீதர் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: கலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன் மணிவிழாக் குழு, நல்லூர், 1வது பதிப்பு, 2013. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xi, 363 பக்கம், விலை: ரூபா 1000., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-4745-04-9.

கலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன் அவர்களின் மணிவிழாவையொட்டி வெளியிடப்பெற்றுள்ள இந்நூல், அவர் எழுதிப் பல்வேறு ஊடகங்களிலும், மலர்களிலும் பிரசுரமான 37 கட்டுரைகளை உள்ளடக்கியது. சைவ சமயம் அடிப்படைத் தத்துவங்கள், நடைமுறையில் நீடு நிலைபெறும் சைவ சித்தாந்தமும் திருமுறைகளும், சைவசமயத்தின் ஆதார நூல் எது?, சிவதத்துவப் பேருண்மைகள், சிவதத்துவமும் சிவமூர்த்தியின் பரத்துவமும், திருமுறைப் பெருமை, திருமுறையின் முக்கியத்துவமும் ஓதும் முறைமைகளும், திருவாசகத்திற் பக்திப் பெருக்கு, சைவசித்தாந்தமும் திருமுறைகளும்: நடைமுறை அற்புதங்கள், பக்தி இலக்கியங்களின் அடிப்படைகளும் பயன்பாடுகளும், விநாயகப் பெருமானின் பேரருளும் தத்துவார்த்தங்களும், தமிழகத்தில் விநாயகர் வழிபாடு, தனிப்பெருந் தமிழ்த் தெய்வம் முருகப் பெருமான், முருக பாராயணமும் முருகன் திருவடியும், நல்லைக் கந்தனது வேல், வேலால் வினை முடிப்பாய் இக்கணமே, நவநாதச் சித்தர், நந்திக் கொடியும் உலகளாவிய ரீதியில் அதன் நடைமுறையும், கொழும்பு கொச்சிக்கடை பொன்னம்பலவாணேச்சரம், கொம்பனித்தெரு அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், தத்துவப் பொருளும் சஷ்டி மகிமையும், பங்குனி உத்திரத் திருநாள், புதுவருடப் பிறப்பும் இந்துப் பண்பாட்டு அம்சங்களும், தமிழ்ப் புத்தாண்டும் அதன் தத்துவார்த்தங்களும், வைகாசி விசாகம்: தத்துவமும் நடைமுறையும், ஆனி உத்தரம், இந்துக்களின் தீபாவளித் திருநாள், தீபாவளி பண்டிகையும் அதன் புராண வரலாறும், கோயிற் கலை வரலாற்றிலே சிற்ப ஓவியச் சான்றாதாரங்கள், ஆற்றுகைக் கலைகளில் பண்ணிசையும் கதாப்பிரசங்க மரபும், இளைஞர் வாழ்வில் சமயம், நகுலநாதம் ஒரு கண்ணோட்டம், பக்தி மலர்-அணிந்துரை, ஈழத்துச் சிவாலயங்கள்-அணிந்துரை, யாழ்ப்பாணத்து நல்லூர் இராசதானியின் வரலாறு, தீவகப் பற்றில் சைவமும் பௌத்தமும், இந்து கலாசார அமைச்சும் இந்து மாநாடும் ஆகிய 37 தலைப்புகளில் எழுதப்பட்ட சமயக் கட்டுரைகள் இதில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Real time Blackjack21

This feature lets professionals so you can protected winning symbols and respin for additional opportunities to win, notably increasing the game play. Games for example