மகேஸ்வரி வேலாயுதம். கொழும்பு 3: இந்து சமய அலுவல்கள் அமைச்சு, இல.64, காலி வீதி, 1வது பதிப்பு, 2005. (அச்சக விபரம் தரப்படவில்லை).
viii, 72 பக்கம், வண்ணப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29.5×21 சமீ.
இந்து சமய அலுவல்கள் அமைச்சின் 2004-2005 காலப்பகுதிக்குரிய செயற்பாடுகள் பற்றிய விளம்பரக் கட்டுரைகளை உள்ளடக்கும் ஆவணப்பதிவு இது. கோயில்களும் புனருத்தாரணமும், அறநெறிப் பாடசாலைகளின் அபிவிருத்தி, ஆன்மீக எழுச்சிப் பட்டறை, இந்து பிரச்சாரகர்கள் பயிற்சி, அந்தணர் அல்லாத பூசகர்களுக்கான பயிற்சி நெறி, சமய விழாக்கள், மகாநாடுகள், சுநாமி நிவாரணம், மீள்கட்டமைப்பு, கலாசார மண்டபங்கள், கலைகள், கலைஞர்களுக்கான ஊக்குவிப்பு, ஆதரவற்றோர் இல்லம் மற்றும் ஏனைய நிறுவனங்களுக்கான உதவிகள் ஆகிய தலைப்புகளின்கீழ் புகைப்பட ஆதாரங்களுடன் இப்பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நூலாசிரியர், சட்டத்தரணி செல்வி மகேஸ்வரி வேலாயுதம் இந்து சமய அலவல்கள் அமைச்சின் மதியுரைஞராகப் பணியாற்றியவர். 13.5.2008 அன்று யாழ்ப்பாணம், நெல்லியடியில் வைத்து இனம்தெரியாத இளைஞர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.