சு.செல்லத்துரை. தெல்லிப்பழை: கலை இலக்கியக் கள வெளியீடு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1999. (யாழ்ப்பாணம்: அச்சக விபரம் தரப்படவில்லை).
vi, 42 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×15 சமீ.
சைவநற்சிந்தனைகள், கலைப்பூங்கா உரைகள், சைவச் சொற்பொழிவுகள் என, இளவாலை சைவப்புலவர் சு.செல்லத்துரை அவர்கள் இலங்கை வானொலியில் ஆற்றிய உரைகளின் தேர்ந்த தொகுப்பு இதுவாகும். சைவ நற்சிந்தனை உரைகளில், வாக்கும் வாழ்வும், நித்திய விரதம், வல்லமை பெறும் வழி, மறக்கருணை, சாந்தணையும் கற்போம், யார் பெரியர், அழுக்காறு அகற்றி வாழ்வோம், கோமாதா குலம் காப்போம், தீதும் நன்றும் பிறர்தரவாரா, எது பெரிது ஆகிய 10 உரைகள் அடங்குகின்றன. கவிதைக் கற்போவியம், இளங்கோ திருமுகம், யாவரும் கேளிர் ஆகிய மூன்று உரைகள் கலைப்பூங்கா நிகழ்ச்சியில் வழங்கப்பட்டவை. தடுமாறாத சைவம், தருமத்தின் வழிச்செல்வோம் ஆகியவை சிறப்புச் சைவச் சொற்பொழிவுகளாகும். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 130059).