ஆறுமுக நாவலர் (மூலம்), அகளங்கன் (தொகுப்பாசிரியர்). வவுனியா: சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம், புகையிரத நிலைய வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 1997. (வவுனியா: சுதன் அச்சகம்).
xii, 119 பக்கம், விலை: ரூபா 60., அளவு: 18×12 சமீ.
ஆறுமுகநாவலர் அருளிய சைவ வினா-விடைகளை உள்ளடக்கியுள்ள இந்நூல் தற்கால சைவ சமயம் கற்றொழுகும் மாணவர்களின் பயன்பாடு கருதித் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளது. இந்நூல் பதியியல், புண்ணிய-பாவ இயல், விபூதியியல், நித்திய கரும இயல், சிவாலய தரிசன இயல், தமிழ் வேத இயல், பசுவியல், பாசவியல், வேதாகமவியல், சைவ பேதவியல், உருத்திராட்சவியல், பஞ்சாட்சரவியல், சிவலிங்கவியல், சிவாலய கைங்கரியவியல், குரு சங்கம சேவையியல், மாகேசுர பூசையியல், விரதவியல், அன்பியல், ஐந்தாம் குரவர் ஆறுமுகநாவலர் ஆகிய 19 அத்தியாயங்களில் பிரித்து விளக்கி எழுதப்பட்டுள்ளது.