10132 கதிர்காமத்தை தரிசித்த சித்தர்களும் முனிவர்களும்: அகத்தியர் முதல் யோகர் சுவாமிகள் வரை.

என்.கே. எஸ். திருச்செல்வம். கொழும்பு 6: ஆலயம் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, இணை வெளியீடு, கொழும்பு: அகில இலங்கை இந்து மாமன்றம், 1வது பதிப்பு, 2014  (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xv, 82 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 300., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-0881-12-3.

கதிர்காமத் திருத்தலத்தில் பதின்மூவாயிரம் வருடங்களுக்கு முன் இருந்த சிவவழிபாடு முதல் கதிரமலையில் சிவபெருமானை முருகப்பெருமான் வழிபட்டமை மற்றும் இராமாயணக் காலத்தில் இராவணன் உட்பட்ட மன்னர்கள் முருகனைக் கதிர்காமத்தில் வழிபட்டமை முதலிய வரலாற்றுப் பதிவுகளை இரத்தினச் சுருக்கமாக ஆய்வாளர் திரு. திருச்செல்வம் இந்த நூலில் தந்திருக்கிறார். அகத்தியர் முதல் யோகர் சுவாமிகள் வரையான சித்தர்களும் முனிவர்களும் அப்புனிதத் திருத்தலத்தினை தரிசித்த வரலாற்றையும் நூலாசிரியர் எடுத்துக் கூறியிருக்கிறார். கதிர்காமத்தின் தொன்மை, கதிர்காமத்தின் பண்டைய கோயில்கள், கந்தசுவாமிக் கடவுளின் புனிதபூமி, கதிர்காமத்திற்கு வந்த முனிவர்களும் சித்தர்களும், கதிர்காமத்திற்கு வந்த வட இந்திய தசநாமி சுவாமிகள், கடந்த நூற்றாண்டில் கதிரமலைக்குத் தீர்த்தயாத்திரை சென்றவர்கள் ஆகிய ஆறு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்