செ.இரத்தினப்பிரகாசம் (பதிப்பாசிரியர்).கொழும்பு 6: செ.இரத்தினப்பிரகாசம், 115/4 டபிள்யு ஏ சில்வா மாவத்தை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, மே 2010. (கொழும்பு 13: லட்சுமி பிரின்டர்ஸ், 195, Wolfendhal Street).
xviii, 182 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 100., அளவு: 21×14 சமீ.
புதுக்கோவில் எனப் பெயர்பெற்ற கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணியசுவாமி கோவிலின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிய 180 ஆண்டு வரலாற்றுப்பதிவு இது. 1830இல் நினைக்கமுடிச்சான் வளவு என்ற பெயர்குறிப்பிடப்பட்ட வளவில் கோவில் ஆரம்பமானது முதல் இற்றைவரை அதன் வரலாறு பதிவுசெய்யப்பட்டுள்ளது. வரலாற்றுக் குறிப்புகளுடன் அங்கு நடைபெறும் கிரியா தத்துவ விளக்கங்களும், உற்சவங்களின் தன்மையும் பத்து அத்தியாயங்களாகப் பிரித்து 119 உப தலைப்பகளில் இந்நூலில் அடக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 55536).