கந்தப்பு ஆனந்தக் குமாரசாமி, நடராசா விநாயகமூர்த்தி (தொகுப்பாசிரியர்கள்). கரவெட்டி: கரவையூர் ஆதவன், 1வது பதிப்பு, 2009.(யாழ்ப்பாணம்: பிள்ளையார் அச்சகம், நல்லூர்).
viii, 60 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×15 சமீ.
யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சிப் பகுதியில் கரவெட்டிக் கிராமத்தில் எழுந்தருளியுள்ள தச்சந்தோப்பு சிந்தாமணி விநாயகர் ஆலய தல வரலாறு பற்றியும் அதன் தொன்மைச் சிறப்புகள் பற்றியும் விரிவாகப் பதிவுசெய்யும் நூல். 182 வருடங்கள் பழமையான இந்த ஆலயவரலாறு, ஆலய சிவாச்சாரியார்கள், திருவிழா உபயகாரர்கள், அறங்காவலர்கள் பற்றிய விபரங்கள் உள்ளன. அமுத மொழிகள் தொகுப்பொன்றும், சிவாகம மரபில் விநாயகரின் திருவருட் கோலங்கள் (ஸ்ரீபதி சர்மா கிருஷ்ணானந்த சர்மா) என்ற கட்டுரையும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 46851).