10138 திருக்கேதாரநாதமும் கேதாரகௌரி விரதமும்: திருக்கேதார யாத்திரைப் புகைப்படங்களுடன்.

இடைக்காடு வேல்.சுவாமிநாதன். அச்சுவேலி: இடைக்காடு இந்துநெறிக் கழகம், இடைக்காடு, 1வது பதிப்பு, சித்திரை 2001. (அச்சக விபரம் தரப்படவில்லை).

27 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×15 சமீ.

கேதாரநாதம் என்றால் என்ன? அது எங்குள்ளது? கேதாரகௌரி என்பவர் யார்?அவர் அனுஷ்டித்த விரதம் என்ன?அதனால் அவருக்குக் கிடைத்த பலாபலன்கள் என்ன?  நாம் அதனை எப்படி அனுஷ்டிக்கவேண்டும்? இதனால் மானிடராகிய நாம் பெறும் பலாபலன்கள் யாவை? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை தருவதாக இந்நூல் அமைந்துள்ளது. இத்தகவல்களை உள்ளடக்கிய திருக்கேதாரநாதம் யாத்திரை, கேதாரகௌரி விரத வரலாறு, புண்ணியவதி பாக்கியவதி கதை, திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம், சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம், கௌரிகாப்புப் பாடல், கேதாரீஸ்வரர் பூஜாவிதி, ஆலய வழிபாடு ஆகிய எட்டு அத்தியாயத் தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. மேற்படி இடைக்காடு இந்துநெறிக் கழகத்தின் மூன்றாவது வெளியீடாக இந்நூல் அமைந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 41964).

ஏனைய பதிவுகள்